எட்டாவது நாடாளுமன்றத்தின் யாழ்ப்பாணத்துக்கான முதல்தர நாடாளுமன்ற உறுப்பினரா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயரிடப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கும் இணையத்தளமான manthri.lk இணையத்தளமே இந்த தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கரை வருடங்களில் நாடாளுமன்றத்தில் அதிக நேரம் ஜனாதிபதி, பிரதமர், அமைசர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டமைக்காகவும் அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகமான நேரம் நாடாளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழர்களின் கலை கலாச்சாரத்தை பாதுகாத்ததுடன் மாவட்டங்கள், கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதிகமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்தியமைக்காக முதற் தர நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தில் சாள்ஸ் நிர்மலநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞா.சிறிநேசனும், நுவரெலியா மாவட்டத்தில் ம.திலகராஜ் எம்.பியும் தெரிவாகினர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் சிறந்த எம்.பியாக 6ஆம் இடத்தில் டக்ளஸ் தேவானந்தா தரப்படுத்தப்பட்டுள்ளார். தமிழ் எம்.பிக்களில் இதுவே அதிகபட்ச தரப்படுத்தலாகும். முதலாமிடத்தில் அநுரகுமார திசநாயக்கவும், இரண்டாமிடத்தில் பிமல் ரத்னாயக்கவும், மூன்றாமிடத்தில் நளிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவாகினர். இவர்கள் மூவருமே ஜே.வி.பி எம்.பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.