சாவகச்சேரி – கச்சாய் படை முகாமில் இராணுவ படையினர் வெடி கொளுத்தி கொண்டாடிய சத்தத்தைக் கேட்டு பிரதேச மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த முகாமில் இரவு வேளையில் அடிக்கடி குண்டுச் சத்தம் மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் ஆகியன ஒலித்தமையால் பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இரவு 8.30மணியளவில் ஆரம்பமான இச் சத்தங்கள் இரவு 10மணிவரை தொடர்ந்தது.
இது தொடர்பாக இராணுவ தரப்பிடம் வினவிய போது,
தமது படை முகாமில் உள்ள படைப் பிரிவொன்றின் 18ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு வானவில் வெடி வெடிக்க வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டதாகவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.