வடக்கு மாகாணத்தின் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமையன்று (13) விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
யாழ் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மற்றும் பல்வேறு திணைக்களங்கள் சார்ந்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபடுவார்.



















