மகன் இரவு பகல் பாராமல் செல்போனில் கேம் விளையாடியதால் அத்திரமடைந்த தாய் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 33 வயதான அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி என்ற பெண்மணி திருமணமாகி விவகாரத்தானவர்.
இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரில் 11 வயதுடைய ரஃபேல் என்னும் குழந்தை 10 நாட்களாக காணவில்லை மேலும் இதுபற்றிய புகாரையும் அலெக்ஸாண்ட்ரா போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தான் அலெக்ஸாண்ட்ராவின் வீட்டின் கேரேஜில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கேரேஜில் இருந்த அழுகிய சடலத்தை மீட்டு ஒருவாரமாக விசாரணை நடத்தியுள்ளார்.
அதன் பிறகுதான் இறந்த சடலம் சிறுவன் ரஃபேல் என்பது தெரியவந்ததுள்ளது. இது குறித்து தாயிடம் மோற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் அதிர்ச்சியில் உறைந்துள்னர்.
தன் மகன் இரவு பகல் எனப்பாராமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனை தான் எப்போதும் கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.
மகன் ரஃபேலி தாய் டகோகென்ஸ்கியின் செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை, சடலத்தை என்ன செய்யவேண்டும் என தெரியாமல், மறைத்து வைக்கும் வகையில் மகனின் சடலத்தை ஓர் அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்துள்ளதாகவும் அவரே குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் பொலிஸாருக்கு பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.




















