உலகில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவது பல நன்மைகளை கொடுத்தாலும் அது தீமைகளையும் கொடுக்கிறது என்பதை மறுக்க இயலாது.
அதில் முக்கியமானது ரகசிய கமெரா.
பொதுவாக ரகசிய கமெராக்கள் எந்தந்த இடங்களில் வைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது?
கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக்குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய கமெராக்களை வைக்கமுடியும்.
இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அநேகமான கிட்டதட்ட அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.
அதை எப்படி கண்டுபிடிப்பது?
உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி.
இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொன்று சில கமெராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.
இதுதவிர இன்ஃப்ராரெட் கமெராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கமெராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கமெராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கமெரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம்.
அதே போல தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்து பாருங்கள். hidden camera detectorஎன்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம்.
இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம்.