தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த சனிக்கிழமையே பொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இன்று இரவு பரிசோதனை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருடன் தொடர்புடையவர்கள் எழுவை தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.