முறிகண்டி- கொக்காவில் பகுதியில் மரக்கறி ஏற்றிவந்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியை விட்டு விலகியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.