முன்னணி வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன் ஆன Zoom தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்று வருகின்றது.
இப்படியிருக்கையில் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது சீன நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவல் பரவலாக காணப்படுகின்றது.
எனவே இந்திய பயனர்கள் குறித்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தும் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இதற்கு அண்மையில் இந்திய – சீன எல்லையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் Zoom நிறுவனமானது இந்திய பயனர்களுக்க பிரத்தியேக குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது தாம் ஒரு சீன நிறுவனம் அல்ல என்ற தகவலே குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுவருகின்றது.
மிகப்பெரிய சந்தைவாய்ப்பான இந்தியாவினை இழக்கவேண்டிய தருணம் வந்துள்ளதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
எவ்வாறெனினும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Yuan தான் 1997 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.