சவுதம்டனில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
அதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது விளையாடியது. அதில் 204 ரன்னில் சுருண்டது. ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (65 ரன்), ஷேன் டாவ்ரிச் (61 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் 318 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நெருக்கடியுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 313 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து 200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், 95 ரன்கள் சேர்த்த ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் தொடர்ந்து இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.