ஒரு வருடத்திற்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க உள்துறை செயலாளர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான பிரதி பட்டேல், பிரித்தானியாவின் புதிய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற வரவு முறை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்களை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் படி, ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்ற வெளிநாட்டு குற்றவாளிகளை விலக்க அல்லது நாடு கடத்த அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
பிக் பாக்கெட்டுகள் மற்றும் கொள்ளையர்கள் போன்ற தொடர்ச்சியான குற்றவாளிகளுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களைத் தடைசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களையும் குறிக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
தற்போதைய விதிகளின் கீழ், குற்றவாளிகளை ஒரு வழக்கின் அடிப்படையில் மட்டுமே விலக்க முடியும். புதிய குடியேற்ற முறை, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.
அதன் படி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து புலம்பெயர்ந்தோர் இல்லை, குறைந்த திறமை கொண்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை மட்டுமேகுறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயர் திறமையான தொழிலாளர்கள் பிரித்தானியா விசாக்களைப் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் வாழவும், வேலை செய்யவும் விரும்பும் நபர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற 70 புள்ளிகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.