சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.
இருப்பினும் இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.
அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும் என டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று சீனாவில் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது என பரவலாக நம்பப்படுகிறது.
ஆனால் இது தொடர்பான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்பது அமெரிக்காவின் புகார்.
மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்தே விலகுவதாகவும் அமெரிக்கா அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.