பிரான்சில் அடுத்த சில வாரங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் காரணமாக 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் வைரஸின் தாக்கம் குறைந்து வருவது போல் இருப்பதால், ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது.
இதையடுத்து, பிரதமர் இமானுவேல் மேக்ரான் நேற்று, கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதை தடுக்க, அடுத்த சில வாரங்களில் மக்கள் கடைகளிலும் பிற மூடப்பட்ட பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.
இரண்டு மாதங்கள் ஊரடங்கிற்கு பின்னர் கடற்கரைகள், பார்கள் மற்றும் உணவகங்களைத் திறப்பதால் சில இடங்களில் இது மீண்டும் பரவுகிறது.
இது கொஞ்சம் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. இதனால் நாம் அதை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும், அடுத்த சில வாரங்களில், மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசங்களை கட்டாயமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதனால், சக குடிமக்கள் வெளியில் இருக்கும்போது முடிந்தவரை முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
நாட்டில் தற்போது, பொது போக்குவரத்து மற்றும் சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகமூடி அணிய வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. ஆனால் கடைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.