சுகாதார வழிகாட்டுதல்கள் பொது மக்களால் பின்பற்றப்படுகிறதா என்பதை அவதானிக்க ஒரு சிறப்பு பிரிவை நிறுவுமாறு சுகாதார அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சரின் தலைமையின் கீழ் இன்று நடைபெற்ற கொரோனா மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி,கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் பின்பற்ற தவறிவிட்டனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் சூழ்நிலையை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து கொரோனா பரவுவதற்கு முன்னர், இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான காரணத்தை அமைச்சர் குறிப்பிட்டார்,
முக்கியமாக மக்கள் ஆதரவு காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
உலகளாவிய தொற்றுநோயைத் கட்டுப்படுத்த பொதுமக்கள் அளித்த ஆதரவின் காரணமாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்த பல நாடுகளில் இலங்கை இணைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள், அரசாங்கம் பிறப்பிக்கும் சுகாதார உத்தரவுகளுக்கு கடைபிடிக்க தவறிவிட்டனர் என சுகாதார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் மக்கள் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


















