கூகுள் நிறுவனத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சேவையே Google Play Pass ஆகும்.
இச் சேவையானது அன்ரோயிட் சாதனங்களுக்கான ஹேம்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்களை கட்டணம் செலுத்தப்பட்ட கணக்கின் ஊடாக தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தரப்பட்டுள்ளது.
முதன் முதலில் அமெரிக்காவில் மாத்திரமே இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் 9 நாடுகளுக்கு இச் சேவை விஸ்தரிக்கப்படுகின்றது.
இதன்படி அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலுள்ள பயனர்கள் இச் சேவையினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
முதலில் வருடம் 29.99 டொலர்கள் செலுத்தி இச் சேவையினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த நிலையில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் மாதாந்தம் 4.99 டொலர்கள் என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்தி குறித்த சேவையைப் பெறக்கூடிய வகையில் மாற்றம் மேற்கொள்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.