நாமக்கல் மாவட்டத்தில் மாடு மேய்க்க சென்ற இரண்டு குழந்தைகளின் தாய் இறந்த நிலையில் ஆடையின்றி வனப்பகுதியில் இருந்து மீட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் சிக்கியுள்ளது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (30) இவருக்கு தீபா (25) என்ற மனைவியும் 7 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருக்கு உதவியாக மனைவி தீபா ஆடு மாடு மேய்க்க செல்வது வழக்கமாம்.
கடந்த 12ம் திகதி துணி துவைத்து விட்டு மாடு மேய்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு, கீரைக்காடு வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது பல மணி நேரமாகியும் வீடு திரும்பாததால் கணவருடன் சேர்ந்து அவரது உறவினரும் தேட ஆரம்பித்த நிலையில், காட்டுப்பகுதியில் மனைவி ஆடையின்றி வாயில் துணி கட்டப்பட்டு சடலமாக காணப்படுவதாக தகவல் கிடைக்க சென்று பார்த்துள்ளனர்.
பின்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தீபாவின் தொலைந்து போன மொபைல் திண்டூர்நாடு ஊராட்சி தென்னங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பயன்படுத்தி வந்ததால் அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பொழுது சிறுவன் தான் தான் தீபாவை, வன்புணர்வு செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தனது ஆசைக்கு இணங்க மறுத்த தீபாவை அடித்து துன்புறுத்தி இவ்வாறு செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















