ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி 25 மில்லியன் ஈரானியர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 35 மில்லியன் பேர் ஆபத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சக அறிக்கையில் தனது புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டுக்கு இரண்டு மடங்கு படுக்கைகள் தேவைப்படும் என்று எச்சரித்தார். இப்போது வரை, அதிகாரப்பூர்வமாக தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,69,440 ஆகும்.
இன்று நாம் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், நம் நாட்டில் 25 மில்லியன் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எஞ்சியிருக்கும் நமது மக்கள் தொகையில், சுமார் 30 முதல் 35 மில்லியன் பேர் வரவிருக்கும் மாதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறது.
எதிர்வரும் மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 150 நாட்களில் நாம் கண்டதை விட இரு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 150 நாட்களில் சுமார் 14,000 பேர் வைரஸால் இறந்துவிட்டதாகவும், 2,00,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















