கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் பெறுமதியான தேக்கு மர குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலிருந்து மரக்குற்றிகளை இன்று ஏற்றியவாறு பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குறித்த மரக்குற்றிகள் விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகின்றமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் உப பரிசோதகர் ஜயேஸ் தலைமையிலான குழுவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த வாகனம் மற்றும் மர குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.