வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டு அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரின் சண்டித்தனத்தினால் இந்த களேபரம் ஏற்பட்டது.
சபை அமர்வின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன் சபை தவிசாளரை தாக்கவும் முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த உறுப்பினரை வெளியேறுமாறு தவுசாளர் பணித்த நிலையில் வெறியேறாது குழப்பம் விளைவித்ததால் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
எனுனிம் சபையில் குழப்பம் விளைவித்த சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் தொடர்ந்தும் சபையில் அமர்ந்திருந்த நிலையில் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சபையின் தவிசாளருடன், சபையில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சி தவிர்ந்த மற்றைய கட்சிகளன கூட்டமைப்பு,ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடீபி உறுப்பினர்கள் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தினர்.
இதன் பின்னர் சண்டித்தனத்தில் ஈடுபட்ட சுதந்திரக் கட்சியின் தரப்பிலிருந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்போது, தாக்க வந்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.


















