உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாட் பதியுதீனிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதை, தேர்தல் முடியும் வரை பிற்போடுவது, ஏற்கனவே தடுப்புக்காவலில் உள்ளவர்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலென பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதை தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.
இதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


















