கம்பஹாவில் உள்ள ஒரு பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். பாடசாலையில் இயற்பியல் கற்பித்த ஆசிரியரே தொற்றடன் அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்த, அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை தொற்றடன் அடையாளம் காணப்பட்டார். அவரது மைத்துனரிடமிருந்தே அவருக்கு தொற்று உறுதியானது.
கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த இராணுவ அதிகாரியொருவரை கம்பஹாவிற்கு ஏற்றி வந்து, கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சாரதியின் மைத்துனரே இந்த ஆசிரியர். அவர் யக்கல பகுதியில் வசிப்பவர்.
ஆசிரியருடன் நெருங்கிப்பழக்கிய ஏனையவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
பாடசாலையின் ஊழியர்கள், மாணவர்கள் 52 பேர் மற்றும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட 100 மாணவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் யாரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


















