ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர்தான் கடந்த 18 மாதங்களாக ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது அந்த இடத்துக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஒருவர் முதலிடத்தில் இருந்தது இதற்கு முன்பு 2006ல்தான் நடந்தது. அப்போது ஆண்ட்ரூ பிளின்டாப் நம்பர் ஒன் வீரராக இருந்தார். அதன் பின்னர் யாருமே வரவில்லை. தற்போது அந்த இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஸ்டோக்ஸ்.
2வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடியிருந்தார் ஸ்டோக்ஸ். இதன் மூலம் அவருக்கு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.