நமது சாலைகளின் ஓரங்கள் மற்றும் விளை நிலங்களில் கலைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சியானது பல்வேறு மருத்துவ குணத்தினை கொண்டது. நெருஞ்சி இலையில் இருக்கும் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை பல பாலியல் பிரச்சனை மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
நெருஞ்சி இலைகளை சுமார் 50 கிராம் அளவிற்கு சேகரித்து, அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களின் கருப்பை கோளாறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். மேலும், பெண்களுக்கு குழந்தை பேறு உண்டாகும்.
நெருஞ்சி முள்ளை சேகரித்து, பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினம் இரண்டு கிராம் அளவிற்கு பாலுடன் சேர்த்து காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தியடையும்.
இயல்பாக காட்டுப்பகுதிகளில் பணியாற்றும் நபர்களின் கால்களில் நெருஞ்சி முள் சிறியளவிலான சேதம் ஏற்படுத்தி பெரும் வலியை தந்தாலும், சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது. இரத்தத்தை சுத்திகரிப்பது, சிறுநீர் தடையின்றி செல்வதற்கும் வழிவகை செய்கிறது.
சிறுநீர் பாதைகளில் வலி மற்றும் எரிச்சல் போன்றவை காணப்படும் பட்சத்தில், நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூவை சம இதைவிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டிய பின்னர், சர்க்கரை சேர்த்து காலை வேளையில் குடித்து வந்தால் பாதிப்பு குணமாகிறது.
நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம் சேர்த்து காய்ச்சி பாதியாக வற்றியதும் 60 மில்லி அளவில் காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்துவர கல்லடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
வெள்ளரி விதை மற்றும் நெருஞ்சி விதை இரண்டையும் சம அளவில் எடுத்து, பொடியாக்கி 2 கிராம் அளவில் இளநீரில் சேர்த்து குடித்து வர கல்லடைப்பு பிரச்சனை சரியாகும். கண்ணெரிச்சல் மற்றும் கைகளில் சிவப்பு, கண்களில் நீர் வடிதல், உடல் உஷ்ணத்தை குறைக்க நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல்லை கையளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் அனைத்தும் சரியாகும்.