2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மாத்திரம் இலங்கையில் 140 பாலியல் வன்புணர்வுகள், 42 பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் 54 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தொடர்பான (Stop Child Cruelty Trust) ‘ஸ்டொப் சைல்ட் கியூட்லி டர்ஸ்ட்’ என்ற அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
5442 சிறுவர் துஸ்பிரயோகங்கள், 1642 பெண்கள் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முடிவடைந்தபோது சிறுவர் துஸ்பிரயோகங்கங்கள் தொடர்பான 17ஆயிரம் சம்பவ விசாரணைகள் 10 வருடங்களாக கிடப்பில் உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இது 2018ஆம் ஆண்டு 20ஆயிரமாக அதிகரித்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் நீதியின் மீது எவ்வித நம்பிக்கையும் இன்றி வாழ்வதாக ‘ஸ்டொப் சைல்ட் கியூட்லி டர்ஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்து கவலையை வெளியிட்டிருந்தமையையும் குறித்த சிறுவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.