வேலூர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் ,பேரறிவாளன்,சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறைச்சாலை அடைக்கப்பட்டு உள்ளனர் இதில் முருகனின் மனைவி நளினி வேலூரில் உள்ள பெண்கள் தனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வேலூர் பெண்கள் தனி சிறைச்சாலையில் இருந்த நளினிக்கும் சக கைதிகள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறைதுறையினர் நளினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயன்றததை அடுத்து நளினி தன்னுடைய அறையில் துணி ஒன்றால் தன்னுடைய கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக நளினியை மீட்டனர். மேலும் நளினிக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் நளினி வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி நளினியின் தாயார் சிறை துறைக்கு மனு அளித்துள்ளார். இந்நிலையில் சிறைவாசிகள் நன்னடத்தை விதியின் கீழ் நளினி பார்வையாளர்களை சந்திக்க ஒரு மாதம் சிறை துறை தடை வித்துள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நளினி மற்றும் வேலூர் மத்திய சிறையில் உள்ள அவரது கணவர் முருகன் ஆகியோர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டு வந்ததும் இந்த நிலையில் இந்த சந்திப்புக்கும் ஒரு மாத காலம் சிறை துறை தடை விதித்துள்ளது.