எதிர்பாராத வானிலை, பருவமழை தொடர்பான மாற்றங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்களில் வேலைசெய்வது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் மஞ்சுலா கரியவாசம் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“ஜூன் நடுப்பகுதியில், இந்த நோய் குறித்த சந்தேகத்திற்கிடமானவர்களின் எண்ணிக்கை 3,500 ஆக உள்ளது. இரத்தினபுரி 25.3 சதவீத நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள இடமாக மாறியுள்ளது.
அத்துடன், களுத்துறை, கேகாலை, காலி, பதுளை, கொழும்பு, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 40% தொற்றுநோய்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
விவசாய நடவடிக்கைகள் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் தங்களது கைவிடப்பட்ட நிலங்களில் அண்மையில் பயிரிடத் தொடங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாக்டீரியாவால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
தண்ணீரில் காணப்படும் இந்த பாக்டீரியா, சேதமடைந்த தோல் (சிறிய வெட்டுக்கள் மற்றும் கீறல்கள்) வழியாகவும், சளி சவ்வுகளுடன் (கண்கள் மற்றும் வாய்) தொடர்பு கொள்வதன் மூலமும் உடலில் நுழைய முடியும்.
இந்நிலையில், விவசாயிகள், இரத்தின சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் வடிகால்களில் பணிபுரியும் நபர்கள் அருகிலுள்ள சுகாதார அலுவலரிடமிருந்து முன் சிகிச்சையைப் பெறுவது மிக முக்கியமானதாகும்.
இந்த சிகிச்சை வாரத்திற்கு ஒரு முறை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த பாக்டீரியா தொற்று அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படலாம்.
சிகிச்சைகள் பெறுவதில் தாமதம் ஏற்படும் போது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது முக்கிய உள் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தால் மரணம் கூட ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.