சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக புத்தல – ஒக்கும்பிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமியை பிரதான சந்தேகநபரின் மனைவியே வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அங்கு சிறுமி பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஒக்கும்பிட்டிய பொலிஸார், பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் இருவரும் வெல்லவாயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், ஒக்கும்பிட்டிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.