நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதி திருகோணமலையில் உள்ள 20 எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளது.
இந்த எண்ணெய் தாங்கிகளை ஸ்ரீலங்காவுடன் இணைந்து கையாள வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கமாக இருந்து வருகிறது.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை ஸ்ரீலங்காவும் இந்தியாவும் இணைந்து கையாள்வதற்கான உடன்படிக்கை கடந்த 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.
எரிபொருளை களஞ்சியப்படுத்தக் கூடிய 101 தாங்கிகளை கொண்ட கட்டமைப்பில் 99 தாங்கிகளை மாத்திரமே பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.