ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தோர் மீண்டும் சிறிகொத்தா வந்தால் அவர்களை நான் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுப்பேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை இல்லாமல் செய்வதே தமது நோக்கமாகக் கொண்டவர்கள், வேறு கட்சியில் இணைவு வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்க முடியும் ஆனால் உண்மையான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றும் நாட்டைப் பாதுகாக்கும் திறன் தமது கட்சிக்கே இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் வேறு கட்சியிலிருந்து போட்டியிட கட்சித் தலைமை அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது என்றும் சிலர் கருத்து தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அத்தோடு இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக நீதிமன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஜூலை முதலாம் திகதி நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.