தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பல சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இணைந்து நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மேடை வடிவமைப்பாளர் என கூறப்படும், குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறுவர்களில், குழந்தை நடிகர்களும் அடங்குவதாகவும், தவறான இந்த நடவடிக்கைகள் காணொளிகளாக உருவாக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.


















