சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 54 வயதான ஆசிரியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபரினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் வீடியோக்களாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் இன்று (26) நீதிவானிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.