மட்டக்களப்பு- இருதயபுர பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருதயபுரம் 9 குறுக்கு வீதியைச் சேர்ந்த லோறன்ஸ் சேரா (27வயது) என்ற பெண்ணொருவரே காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பெண் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்து வருவதாகவும் சம்பவத் தினமான நேற்று காலை 10 மணிக்கு, நண்பி ஒருவரிடம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
எனினும் அந்த பெண், நேற்று மாலை வரை வீடு திரும்பாதமையினால் அவரை குடும்பத்தினர் தேடியுள்ளனர் ஆனாலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.