மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட மக்கள் அதிகளவானோர் வெற்றிலை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முழுவதுமே வெற்றி பாவனைக்கு பலர் அடிமையாகி உள்ளனர். வீட்டில் வயோதிபர்கள் இருந்தால் அவர்கள் வெற்றிலை போடுவது வழக்கமாகவே உள்ளது.
இருந்த போதும் கடந்த ஒரு வார காலமாக பாக்கு ஒன்றின் விலை 12ரூபா முதல் 15ரூபா என விற்பனை செய்து வருகின்றனர்.
வெற்றிலை கூறு ஒன்றின் விலை 50 ரூபாவாகும். இவ்வாறான விலை எந்த ஒருகாலத்திலும் இருக்க இல்லை என பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடுமையான குளிர்காலத்தில் வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றினை இணைத்து தாங்கள் பணிக்கு செல்லும் போது கொண்டு செல்வர்.
தற்போது நிலவிவரும் கடுமையான குளிரின் போது அதன் விலைஏற்றத்தால் அதனையும் பாவிக்கமுடியாதநிலை தோன்றியுள்ளதாக பாவனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.