இரண்டு வார இடைவெளியின் பின்னர் இன்று மீளவும் பாடசாலைகள் திறக்கப்படுகிறது.
11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மட்டுமே இன்று முதல் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
காலை 07.30 மணி முதல் மாலை 03.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.
ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு குறித்து கல்வி அமைச்சு இதுவரை முறையான அறிவுறுத்தல்களை வெளியிடவில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து ஆசிரியர்களையும் அழைக்கலாமா என்பது குறித்த முறையான அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.
இதற்கிடையில், வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் துணை அதிபர்களும் நாளை முதல் 31 ஆம் திகதி வரை அந்த பாடசாலைகளில் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் கடமைகளை நடத்த கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.