கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜோர்தான் நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள், அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளை பணயமாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக தொழில் இன்றி, சரியான உணவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி குறைந்த தீர்வையாவது பெற்றுக்கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தி, அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாம் தொழில் புரியும் இடத்தில் இந்த அதிகாரிகளை பிடித்து வைத்துக்கொண்ட இலங்கை தொழிலாளர்கள் அவர்கள் வெளியேற முடியாதபடி சுற்றிவளைத்துக் கொண்டுள்ளனர்.
கடந்த 5 மாதங்களாக தாம் சாப்பிட்ட உணவை இந்த அதிகாரிகளுக்கும் வழங்க உள்ளதாகவும் இலங்கை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.




















