நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியும் என அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் செயற்பாடுகள் அனைத்தையும் தடுக்க கூடிய பலம் தேசிய மக்கள் சக்திக்கே இருக்கின்றது.
இதனை வேறு எவராலும் செய்ய முடியாது. ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் எழும்புவதற்கு கூட முடியாது. அவராலும் எதனையும் செய்ய முடியாது.
அதேபான்றுதான் சஜித் பிரேமதாசவினாலும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடிய பலம் கிடையாது.
ஆகவே மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தேசிய மக்கள் சக்திக்கு அனைத்து மக்களும் தங்களின் ஆதரவினை வழங்க வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















