நடிகை வனிதா பீட்டர் பால் திருமண சர்ச்சை பெரிய அளவில் வெடித்துள்ளது. இதில், தற்போது கொரோனா காலத்தில் தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புகாரில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பீட்டா் பால் என்பவரை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், அவரது நண்பா்கள் பங்கேற்றனா்.
இந்த திருமணத்தின் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கொரோனா காலத்தில் பொதுமுடக்கத்தை மீறி உரிய அனுமதியின்றி வனிதா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க நிா்வாகி நிஷா, எஸ்ஆா்எம்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் வனிதா மீது அரசின் 144 தடை உத்தரவை மீறுதல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




















