இந்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் இன்றுறையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அந்த வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஏனைய தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11, 12, 13ஆம் தர மாணவர்களுக்கே தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் விடுமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.