பொதுத் தேர்தலின் போது காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமைக்கமைய மாலை வரையில் என்ன நடக்குமோ என்று கூற முடியாதென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மாவத்தகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் நாங்கள் அனைத்து பகுதிகளிலும் மேல் நோக்கி வந்திருந்தோம். தற்போது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதாகவும், அவ்வாறான யுகத்திற்கு முகம் கொடுக்க எங்களுக்கு நேரிட்டுள்ளது.
வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காலையிலேயே வாக்களிக்கும் நிலையங்களுக்கு சென்று விடுங்கள். இந்த நாட்களில் காலையிலேயே வாக்களித்து விட வேண்டும். இல்லை என்றால் மாலையாகும் போது என்ன நடக்குமோ தெரியவில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















