ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை இந்த முறை பெங்களூரு அணி கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக முன்னாள் இந்திய வீரர் கணித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல், இந்தாண்டு கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான போட்டி செப்டம்பரில் துவங்கி நவம்பரில் முடியவுள்ளது. அதிகாரப்பூர்வ அட்டவணை பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு அணி நிர்வாகமும், தங்கள் வீரர்களை தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அங்கு வீரர்கள் சுமார் ஒரு மாதம் வரை பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, துபாய் மைதானங்கள் மிகப் பெரியது பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும். பெரிதான பந்துவீச்சு இல்லாத அணிகளுக்கு இங்கு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது.
பெங்களூரு போன்ற அணிகளுக்கு இங்கு ஐபிஎல் தொடர் நடப்பது மிகவும் சாதகமான விஷயமாக இருக்க போகிறது.
ஏற்கனவே பெங்களூரு அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இருக்கிறது. ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி என பலரும் இருக்கிறார்கள் அதனை தாண்டி தற்போதைய அணியில் சிறப்பான பந்து வீச்சும் இருக்கிறது.
அதேபோல் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெங்களூர் அணிக்கு இங்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.