ஜேர்மனியில் இளம்பெண் ஒருவர் பேருந்து சாரதி ஒருவரை அடித்து துவம்சம் செய்துவிட்டு தப்பிய நிலையில் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகிரார்கள்.
ஜேர்மனியின் Darmstadt பகுதியில், பேருந்து ஒன்றில், ஒரு இளம்பெண், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் ஏறியிருக்கிறார்கள். ஒருவரும் மாஸ்க் அணியவில்லையாம்.
ஜேர்மனியில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும், கடைகளுக்கு செல்லும்போதும் மாஸ்க் அணிவது சட்டப்படி கட்டாயமாகும்.
ஆகவே, அந்த பேருந்தின் சாரதியான பெண், தொடர்ந்து மாஸ்க் அணியுமாறு அவர்களை வற்புறுத்த, அவர்களோ, அந்த சாரதியை அவமதிக்கும் விதத்தில் பேசினார்களாம். அவர்கள் இறங்கும் இடம் வரவும், அந்த கூட்டத்திலிருந்த இளம்பெண் பேருந்தின் சாரதியை சரமாரியாகத் தாக்கினாராம்.
பின்னர் பேருந்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்திருக்கிறது அந்த கூட்டம். பொலிசார் அந்த பெண்ணை வலைவீசித் தேடி வருவதோடு, அவர்களைக் குறித்து தெரியவந்தால் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.