தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி ஜ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை பலம் இழக்க செய்கின்ற வகையில் தேர்தல் களம் பயன்படுத்தப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆட்சியாளர்களின் பணபலம், பொய் வாக்குறுதிகளால் பல எமாற்று வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தமிழர்களின் அடையாளங்களை அழிப்பாற்காக, தனித்துவத்தினை இல்லாமல் செய்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பல பின்னணிகளில் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் பிரதானமான நோக்கம் தமிழர்களின் இருப்பினை இல்லாதொழிப்பதே. இந்நோக்கம் தமிழர்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்காமல் வேறு சின்னத்திற்கு வாக்களித்தால் மட்டும் சாத்தியமாகின்றது.
இருப்பினும் இந்த தேர்தல் தமிழர்களுக்கு மிகவும் சவாலானதாகவே அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.


















