வெளிநாடுகளிலிருந்து 119 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளதாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி அபுதாபியில் இருந்து 40 பேரும், கோவாவில் இருந்து இரண்டு பேரும், சென்னையில் இருந்து 77 பேரும் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















