கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக இருப்பது ஹரீஸ் அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பே என அகில இலங்கை தமிழர் மகாசபையின் திகாமடுல்ல மாவட்ட தலைமை வேட்பாளருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
காரைதீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
உண்மையில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உண்மையான அக்கறையிருந்தால் இராஜினாமாச் செய்துவிட்டு வர முடியுமா?
உலகம் ஆவலோடு எதிர்பார்த்து வியந்து பார்க்கின்ற தேர்தலாக அம்பாறை மாவட்ட தேர்தல் திகழப் போகின்றது. புலம்பெயர் எமது இனிய உறவுகள் இத் தேர்தலுக்காக எமக்கு உதவி வருகின்றனர்.
காரைதீவு மண்ணைச் சேர்ந்தவர்களும் உதவியுள்ளனர். அம்பாறை மாவட்ட தமிழ் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற தமிழ் இளைஞர்கள் திரண்டுவிட்டனர். அந்த இளைஞர் புரட்சி வீறுகொண்டு எழுந்து வெற்றிநடை போடுகிறது. இளைஞர்கள் தேடித் தேடி வருகின்றனர்.
பல வருடங்களுக்குப் பிறகு அம்பாறைத் தமிழர்கள் கப்பல் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்திருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன் என்றார்.



















