ரணில் – சஜித் இருவரும் ஒன்றா இணைந்து உறுப்பினர்களின் வாக்குகளைச் சேகரிப்பதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் சதித்திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வாக்கு கேட்டார்கள் என்று குற்றச்சாட்டி ஏராளமான உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பெயர் பட்டியல்களை ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும், இறுதியிலிருந்து ஆரம்பம் வரை பல முறை சோதித்துப் பார்த்தோம். ஆனால் சஜித் பிரேமதாசவின் பெயர் அதில் இல்லை. ஏன் என்றால் அவர்கள் திருடர்கள்.
உண்மையான கதை என்ன? ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையிலான பிரிவு உண்மை இல்லை.
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸவின் பிரிவு பொய், மோசடி, ஏமாற்றம், இது ஒரு நாடகம் என அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கி மோசடி காரணமாக ரணில் மீது நம்பிக்கை இழந்த ஐக்கிய தேசிய கட்சியின் வாக்காளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு தமது வாக்குகளை வழங்க தயாராகவுள்ளனர்.
இந்நிலையில் சஜித்தின் நகைச்சுவை நாடகத்தின் ஊடாக ஏமாற்றமடைந்தவர்கள் ரணிலுக்கு வாக்குகளை வழங்கும் நோக்கில் பிரிவு ஏற்பட்டதை போன்று நடிக்கிறார்கள்.
உண்மையாகப் பிரியவில்லை. தேர்தலுக்குப் பிறகு இருவரும் ஒன்று கூடி கட்சியை வழமைபோல் தொடர்வார்கள். அதனால் தான் கட்சி உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றப்படும் போது பிரச்சினை ஏற்பட்டது.
ரணில் தொடர்பாக ஏமாற்றமடைந்தவர்களின் வாக்கு களை சஜித் பிரேமதாசாவிடமும், சஜித் பிரேமதாசாவின் நகைச்சுவை நாடகத்தில் ஏமாற்றமடைந்தவர்களின் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்து உறுப்பினர்களின் வாக்குகளைச் சேகரிப்பதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் சதித்திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.



















