பொலன்னறுவ லங்காபுர பிரதேசத்தில் 1000 பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லங்காபுர பிரதேசசெயலக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு வரை 300 பேரிடம் அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 300 இற்கும் அதிகமான குடும்பங்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டன.
தொற்றிற்குள்ளானவருடன் நெருங்கிப் பழகியவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான ஒருவரின் நண்பரே, பிரதேச செயலகத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். ஆனால், கந்தக்காடு நபரின் மூலமே பிரதேச செயலக உத்தியோகத்தர் மூலம் தொற்றிற்குள்ளாகினாரா என்பது தெரியவில்லையென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவருடன் நெருங்கிப் பழகழய பலர் பொலன்னறுவ, ஹிங்குராங்கொட பகுதிகளில் உள்ளதாகவும், அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.