பிரபல பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் தொடர்பாக பல யூகங்கள் கிளம்பிய நிலையில் மும்பை போலீசார் இது தொடர்பாக பல்வேறு திரைப்பிரபலங்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரில் உள்ள சுஷாந்தின் தந்தை, சுஷாந்துடன் இணைந்து ஒரு வருடமாக வாழ்ந்து வந்த நடிகை ரியா சக்ரபொர்த்தி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் மீது FIR பதிவு செய்த பீகார் காவல்துறையினர் மும்பைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மும்பையில் விசாரணை மேற்கொண்டு வரும் பீகார் போலீசாருக்கு, மும்பை காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பீகார் துணை முதல்வரான சுஷில் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் உள்ள பீகார் போலீசாரை மும்பை காவல்துறையினர் வழிமறித்து போலீஸ் வேன் ஒன்றில் ஏற்றுவது போல வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது
Mumbai police is putting obstruction in way of fair investigation by Bihar police in Sushant death case.Bihar police is doing its best but Mumbai police is not co operating .Bjp feel that CBI shud take over this case.
— Sushil Kumar Modi (@SushilModi) July 31, 2020
Here's a video of the Mumbai police pushing the Bihar police into a van when the media wished to speak to the Bihar police team about #SushantSinghRajput's case#SushantSinghRajputDeathCase pic.twitter.com/bG1jBnFnqt
— ETimes (@etimes) July 31, 2020