அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கருணைக்கொலை சட்டத்தை பயன்படுத்தி 12 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் சில மாகாணங்களில் மட்டும் கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு நியூஜெர்ஸி மாகாணத்திலும் கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த புதிய சட்டத்தை பயன்படுத்தி, நியூஜெர்ஸி மாகாணத்தில் 12 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளனர்.
நியூஜெர்ஸி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 50 முதல் 93 வயதுடைய ஆறு ஆண்களும், ஆறு பெண்களும், கடந்த ஆண்டு, ஆகஸ்டு 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணைக்கொலை செய்யப்பட்ட அந்த 12 பேரில் 9 பேர் புற்றுநோயால் வருந்திவந்தார்கள், மூன்று பேர் அல்ஸீமர் அல்லது பார்க்கின்சன் போன்ற நரம்புமண்டல நோயால் அவதியுற்றுவந்தார்கள்.
நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, 10 பேர் தங்கல் வீடுகளில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள், இருவர் வெவ்வேறு நர்ஸிங் ஹோம்களில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள்.