நாட்டில் முதல்முறையாக, கொழும்பு கிழக்கு மருத்துவமனையில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி தாய், குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த கர்ப்பிணிப் பெண், ஜூலை 10 ஆம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த நிலையில், தனிமைப்படுத்தலுக்காக கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, கடந்த 23 ஆம் தகதி கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவுக்கு குறித்த கர்ப்பிணிப் பெண் மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவம் சாதாரணமாக இல்லாததால், சுற்றுச்சூழலுக்கு வைரஸ் வெளியேறுவதைக் குறைக்கும் வகையில் குறித்த பெண்ணுக்கு சிறப்பு சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவ் சத்திரசிகிச்சையை, சத்திரசிகிச்சை நிபுணர்கள், நுண்ணுயிரியலாளர்கள் உட்பட 35 பேர் கொண்ட மருத்துவ குழு வெற்றிகரமாக செய்து முடித்தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து குழந்தையும் தாயும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு குழந்தையின் மாதிரிகள் அனுப்பப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.