கேரளாவில், நாணயத்தை விழுங்கிய 3 வயது சிறுவனை அரசு மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்ததால், அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவன், நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படது. இதைப் பார்த்த பெற்றோர், அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள், நாணயம் சிக்கி இருப்பதை உறுதி செய்தனர். இருப்பினும் அவர்கள், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து வந்ததால், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை, அங்கும் அனுமதிக்க மறுத்த மருத்துவர்கள், ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.