நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், ராட்சசன்.
இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி.
முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர்.
அதே, படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.
இவர் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடம் இருந்து ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும்.
அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார்.அந்த குழந்தை தான் ரவீனா தஹா என்று பலரும் அறியாத ஒன்று.
இந்நிலையில், தற்போது ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என நடன கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி வந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.